Advertisement

Responsive Advertisement

கல்வியமைச்சருக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்றது சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் சாராம்சம்.


 கல்வியமைச்சருக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று இடம்பெற்றது சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்களின்

சாராம்சம்.

28.04.2022 மற்றும் 06.05.2022 திகதி களில் இடம்பெற்ற தொழிற்சங்க போராட்ட தினங்களை விசேட லீவாக அறிவிக்க இணக்கம் காணப்பட்டது.

தற்போதுள்ள நெருக்கடி நிலையில் பாடசாலை நேரசூசிகளை ஒழுங்கமைத்து, ஒரு ஆசிரியர் 3 நாட்களுக்கு கடமையை மேற்கொள்ளும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பாக ஆராய்ந்து வரும் வாரமளவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் வெளிமாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு , பதவி உயர்வுக்கான தடை தாண்டல் EB வகுப்புகளையும் சனி, ஞாயிறு தினங்களிலேயே கல்வி வலயங்கள் நடத்துகின்றன. இதனால் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்ற காரணத்தால், தடைதாண்டல் விலக்கு அளிக்கப் பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது.

இதற்கும் மாற்று வழிமுறை அறிவிக்கப்படும் என  தெரிவிக்கப் பட்டுள்ளது.

ஆசிரியர் அதிபர் சேவையில் உள்ள குறைபாடுகளை, அமைச்சரவை உப குழு பரிந்துரையின் அடிப்படையில் 6 மாத காலத்துக்குள் தீர்வு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட போதும் அது நடைபெறுவில்லை என்பது தெரிவிக்கப்பட்டது. எதிர்வரும் 3 மாத கால அவகாசம் கல்வி அமைச்சரால் கேட்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் 21 ம் திகதி முதல் தேசிய பாடசாலைகளுக்கான இடமாற்றங்கள் நடைபெறும்.


*இலங்கை ஆசிரியர் சங்கம்.*

Post a Comment

0 Comments