Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை – சுற்றறிக்கை வெளியானது!


 விடுமுறையின் போது விவசாயம் மற்றும் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் அரச துறை ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறையாக அறிவிக்கப்பட்டு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.


அரச துறை ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறையாக பிரகடனப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய எரிபொருள் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு, பொதுத்துறை ஊழியர்கள் தங்கள் சொந்த போக்குவரத்தை அணுகுவதில் சிரமத்தை ஏற்படுத்தியதை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமை காரணமாக அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு வாரத்தில் ஒரு வேலை நாள் விடுமுறை வழங்குவதும், அவர்களது வீட்டு முற்றத்திலோ அல்லது வேறு இடங்களிலோ விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது பொருத்தமானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த முடிவு நீர், மின்சாரம், சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, போக்குவரத்து, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு பொருந்தாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments