Advertisement

Responsive Advertisement

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மோட்டார் சைக்கிள்

 


இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியால் போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வதே மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சனையாக மாறியுள்ளது.

அதற்கமைய, இலங்கையர் ஒருவர் இந்த நெருக்கடிக்கு வெற்றிகரமான தீர்வைக் காண முன்வந்துள்ளார்.

இயாஸ் பசூல் என்பவர், நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

புதிய கண்டுபிடிப்பு

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மோட்டார் சைக்கிள்

இந்த மோட்டார் சைக்கிளை இரண்டு முறையில் பயன்படுத்த முடியும். சாதாரண சைக்கிளாகவும் அதனை பயன்படுத்த முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 கிலோ மீற்றர் பயணிக்க முடியும்.

மற்ற முறையில் மோட்டார் சைக்கிளாக பயன்படுத்தியும் பயணிக்க முடியும். அந்த முறையில் 30 கிலோ மீற்றர் பயணிக்க முடியும். 4 மணித்தியாலங்கள் அதனை சார்ஜ் செய்தால் அரை யுனிட் மாத்திரமே செலவாகும்.

அனுமதி பத்திரம் தேவையில்லை

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை மோட்டார் சைக்கிள்

இந்த சைக்கிளுக்கு தலைகவசம், அனுமதி பத்திரம் எதுவும் தேவையில்லை. இந்த சைக்கிள் இணையத்துடன் இணைகின்றது.

கையடக்க தொலைபேசிகள் மூலம் குறித்த மோட்டார் சைக்கிளை செயற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Post a Comment

0 Comments