வெல்லவாயவில் லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (24) மாலை மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எரிபொருள் வரிசையில் நின்ற நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஒரு நபர் நான்கு பேரை கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் மொனராகலை மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வெல்லவாய பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments