Home » » பாடசாலைகளின் விடுமுறை தொடர்பான அறிவித்தல்

பாடசாலைகளின் விடுமுறை தொடர்பான அறிவித்தல்

 


அனைத்து அரசு மற்றும் கத்தோலிக்க பாடசாலைகளும் 13 ஜூன் 2022 திங்கட்கிழமை மூடப்படும்

மேலும்....

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கு ஜூன் மாதம் 13 ஆம் திகதி விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை (13) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜூன் 13 ஆம் திகதி அரச துறைக்கான சிறப்பு விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட பொது நிர்வாக அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுப் போக்குவரத்து மற்றும் அலுவலக செயற்பாடுகளை பராமரித்தல் தொடர்பான பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்பட்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆனால், அத்தியாவசிய அரச சேவைகளில் ஈடுபடுவோருக்கு இந்த விடுமுறை பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறப்பட்டுள்ளது.



Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |