சாணக்கியனின் விளக்கம்
தம்மை பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் இன்று மாலை விளக்கம் அளிக்க முயன்றபோதும், நாடாளுமன்றுக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் அதற்கு இடமளிக்கவில்லை.
கொல்லப்பட்ட அமரகீர்த்தி அத்துகோரள தொடர்பில் தமது அனுதாபத்தை வெளியிடுவதாக கூறிய சாணக்கியன், ரணில் விக்கிரமசிங்க, தம்மை தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புபடுத்தி கருத்து வெளியிட்டதாகவும், பிள்ளையானுடன் தொடர்புபடுத்தி கருத்துரைத்ததாகவும் சாணக்கியன் குறிப்பிட்டார்.
ரணில் விக்கிரமசிங்கவின் பட்டலந்த தொடர்பில் ..... என்று அவர் மற்றும் ஒரு விடயத்தை ஆரம்பிக்கும்போது சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர், கடந்த மே மாதம் 9ஆம் திகதியன்று கொல்லப்பட்ட அமரகீர்த்தி அத்துகோரள தொடர்பான அனுதாப்பிரேரணையின் உரைகள் இடம்பெற்று கொண்டிருப்பதால், வேறு கருத்துக்களுக்கு இடமளிக்கமுடியாது என்று குறிப்பிட்டு,அடுத்த பேச்சாளருக்கு அழைப்பு விடுத்தார்.
0 Comments