கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பிரதான சந்தேகநபரை கைது செய்ய வலியுறுத்தல்
காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை ஆகிய பகுதிகளில் அமைதியான முறையில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் கடந்த மே 9ஆம் திகதி குழுவொன்றால் தாக்கப்பட்டிருந்தனர்.
இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் பூர்த்தியாவதை நினைவு கூர்ந்தும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்கள் இதுவரையில் கைது செய்யப்படாமையை கண்டித்தும் இன்றைய தினம் கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
காட்சிப்படுத்தப்படும் உருவப்பொம்மை
இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் உருவம் பொறிக்கப்பட்ட முகக்கவசத்துடன் சேலை அணிந்து நபரொருவர் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதுடன், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோரின் உருவப் பொம்மைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
0 comments: