Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய எரிபொருளை வழங்க திட்டம்!

 


அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.


இந்த யோசனை தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலக்க தகட்டில் 0, 1, 2 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் 3, 4,5, 6 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கு செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல வாகன இலக்க தகட்டில் 6,7,8,9 ஆகிய இறுதி இலக்கங்களை கொண்ட வாகனங்களுக்கான எரிபொருளை புதன்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்குமாறும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த நடைமுறை ஆரம்பமாகும் தினம் தொடர்பில் இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

Post a Comment

0 Comments