Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு -வெளியானது விபரம்

 


எரிபொருள் நெருக்கடி மற்றும் நுரைச்சோலை அனல் மின்நிலையம் செயற்படாமை காரணமாக தற்போது நாட்டில் தொடர்ச்சியாக மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

மூன்று நாட்களுக்கான மின்வெட்டு

இந்த நிலையில் எதிர்வரும் மூன்று தினங்களுக்கு நாட்டில் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, நாளை வெள்ளிக்கிழமை (24) மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களுக்கு மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நாளை மறுநாள் சனிக்கிழமை (25) முற்பகல் 9.30 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் 2 மணி நேரம் மற்றும் 30 நிமிடங்களுக்கு மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஞாயிற்றுக் கிழமையான எதிர்வரும் 26 ஆம் திகதி இரண்டு மணித்தியாலங்களுக்கு மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள நிலையில் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் குறித்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

Post a Comment

0 Comments