எரிபொருள் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அனைத்து சுகாதார சேவை ஊழியர்களினால் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வழங்கிய உறுதிமொழிகளையடுத்து கைவிடப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அனைத்து சுகாதார சேவை ஊழியர் தொழில் சங்கங்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டம் பேரணி மாவட்ட செயலகம் வரை முன்னெடுக்கப்பட்ட்து
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கடமையாற்றும் அனைத்து சுகாதார சேவை ஊழியர் தொழில் சங்கங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டு எரிபொருள் வழங்குவதில் இலகுவான பொறிமுறையை வழங்கவேண்டுமென கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
‘ மக்களின் உயிரை முன்னுரிமைப்படுத்தி ‘பதைக்கும் உயிரை பாதுகாப்பதா பாதையில் வரிசையில் நிற்பதா ,’ ‘உயிருக்கா எரிபொருள் ,வியாபாரத்திற்கா எரிபொருள் ‘ போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டையை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது மட்டக்களப்பு நகரூடாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றது இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் கே .கருணாகரன் தனது கடமை நிமித்தம் வெளியில் சென்ற நிலையில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி சிறீகாந்த் உடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சனி சிறீகாந்த் வழங்கிய உறுதிமொழிகளையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் .
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அனைத்து சுகாதார சேவை ஊழியர் தொழில் சங்கங்களின் ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி மதனழகன் கருத்து தெரிவித்தார்
0 comments: