பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷாவை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்த சந்தேகநபர், தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது.
மற்றுமொரு துஷ்பிரயோகம்
குறித்த சந்தேக நபர் கடந்த பெப்ரவரி மாதம் அதே பகுதியிலுள்ள பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்துள்ளதாக நேற்று தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்.
குறித்த பெண் தெரிவிக்கையில், "நான் முன்பள்ளி ஆசிரியராகப் பணி புரிந்தேன். இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கும் போது இந்த நபர் வீட்டிற்குள் நுழைந்து எனது வாயை அடைத்தார். நான் கண் விழித்தேன். என்னை கயிற்றால் கட்ட முயன்றார். நான் கத்தினேன். அவர் உடனடியாக ஓடிவிட்டார்", எனக் குறிப்பிட்டார்.
நடவடிக்கை எடுக்கா காவல்துறை
இது தொடர்பில் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
எனது முறைப்பாட்டுக்கு உரிய நடவடிக்கையை காவல்துறையினர் எடுத்திருந்தால் ஆயிஷாவுக்கு இப்படியொரு நிலைமை வந்திருக்காது என குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
9 ஆம் திகதி வரை விளக்க மறியல்
சிறுமி ஆயிஷா கொலை வழக்கில் குற்றத்தை ஏற்றுக்கொண்ட 29 வயதான குடும்பஸ்தரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நேற்று உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
0 Comments