தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து கிளை அலுவலகங்களையும் நாளை முதல் பிரதி வௌ்ளிக்கிழமைகளில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது காணப்படும் வளப் பற்றாகுறையுடன் அரச செலவை குறைப்பதற்கு ஊழியர்களைப் பணிக்கமர்த்துவதை வரையறுக்குமாறு பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபத்திற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பிரதி வெள்ளிக்கிழமைகளில் தொழில் திணைக்களத்தின் தலைமை மற்றும் மாவட்ட அலுவலகங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு தொழில் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
0 Comments