கொஸ்கம – சாலாவ தோட்டத்தில் 13 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மூன்று நாட்களாக காணாமல் போயுள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுமி கடந்த 5ஆம் திகதி காலை 8 மணியளவில் தான் கல்வி கற்கும் பாடசாலையில் சிரமதானம் இருப்பதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி வீடு திரும்பாததால், சிறுமியின் தாய் பொலிஸில் புகாரளித்துள்ளார்.
இதையடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ள கொஸ்கம பொலிஸார், சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறும் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 Comments