சிங்களம் மற்றும் ஆங்கில ஆசிரியர்கள் மத்தியில் மேலதிக ஆசிரியர்கள் உள்ளனர்.
மாகாண பாடசாலைகளை பொறுத்த வரையில் தென் மாகாணத்தில் 421 ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் 224 மேலதிக ஆசிரியர்கள் உள்ளனர்.
மத்திய மாகாணத்தில் 114மேலதிக ஆசிரியர்கள் உள்ளனர்.
வடமேல் மாகாணத்தில் 2383 வெற்றிடங்கள் உள்ளன.
வடக்கு மாகாணத்தில் 1560 வெற்றிடங்கள் உள்ளன.
மேல் மாகாணத்தில் 1188 வெற்றிடங்கள் உள்ளன.
ஊவா மாகாணத்தில் 900 வெற்றிடங்கள் உள்ளன.
கிழக்கு மாகாணத்தில் 2618 வெற்றிடங்கள் உள்ளதாக கல்வியமைச்சர் குறிப்பிட்டார்.
இரண்டாம் இணைப்பு
பதுளை மாவட்டத்துக்காக கடந்த அரசாங்க காலத்தில் 68 பெருந்தோட்டங்களை மையப்படுத்தி 18 கலாசார மையங்களை அமைப்பதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து அந்த மையங்களுக்கான இடங்கள் ஒதுக்கப்பட்டு அடிக்கற்களும் நாட்டப்பட்டுள்ளன.
இந்த இடங்களுக்காக 20.5 மில்லியன் ரூபாய்கள் முற்பணமாக வழங்கப்பட்டுள்ளன.
எனினும் பெருந்தோட்டங்களில் இடங்கள் கிடைக்காமை காரணமாகவே இந்த மையங்கள் அமைக்கப்படவில்லை என்று அரசாங்கம் பதிலளித்துள்ளது.
இது முழுமையாக பொய்யான தகவல் என்று குறிப்பிட்ட வடிவேல் சுரேஸ், பெருந்தோட்ட மக்களை ஏன் இவ்வாறு அரசாங்கம் ஏமாற்றுகிறது என்று கேள்வி எழுப்பினார்.
முதலாம் இணைப்பு
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் நாடாளுமன்ற அமர்வு சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நாடாளுமன்றில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட உரையொன்றை ஆற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments