Advertisement

Responsive Advertisement

மின்கட்டணத்தை ஒருபோதும் அதிகரிக்க விடமாட்டேன்; அமைச்சர் தெரிவிப்பு !

 


மின்சார சபை அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரித்து, மக்கள் மீது சுமையை ஏற்றுவதற்கு தான் தயாராக இல்லையென மின்சார மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.


மின்சார கட்டணத்தை நூற்றுக்கு 300 வீதத்தால் அதிகரிக்கும் யோசனை மின்சார சபையிடமிருந்து தனக்கு கிடைத்துள்ளதாகவும் மக்கள் மீது சுமையை சுமத்த அவ்வாறான யோசனைகளை ஒருபோதும் அமைச்சரவைக்கு முன்வைக்கப் போவதில்லையென்றும் அமைச்சர் கூறினார்.

மின்சார கட்டண உயர்வு தொடர்பில் வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜயசேக்கரவுக்கும் இலங்கையின் மின்சார சபையின் தலைமைக்கும் இடையில் கருத்துவேறுபாடுகள் எழுந்துள்ளன.

மின்கட்டணங்களை அதிகரிக்க வேண்டுமென இலங்கை மின்சார சபை அமைச்சரவைக்கு விடுத்துள்ள வேண்டுகோள்களை ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென அமைச்சர் கஞ்சன விஜயசேக்கர தெரிவித்துள்ளார்.

மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்களுக்கு இலங்கை மின்சார சபை ஆதரவளிக்காததன் காரணமாகவே மின்கட்டண அதிகரிப்பு தொடர்பான அதன் வேண்டுகோள்களை ஏற்கப்போவதில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை தங்கள் வேதனங்களை 25 வீதமாக அதிகரிக்கவேண்டும் என்ற கூட்டு ஒப்பந்தமொன்று இலங்கை மின்சார சபையிடம் உள்ளதென தெரிவித்துள்ள அமைச்சர்,

மீள்புதுப்பித்தக்க சக்தி தொடர்பான திட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில் – உற்பத்தி செலவு குறைக்கப்படாததால், மின்சார சபையின் வேதனம் மற்றும் மின்சார உற்பத்தி செலவுகளை நுகர்வோர் மீதே திணிக்கும் நிலை காணப்படுகின்றது. இதனை மாற்றவேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments