சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான அட்டைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள காரணத்தினால் அலுவலகத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
புதிய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான விண்ணப்பங்களும், காலாவதியான உரிமங்களை புதுப்பிப்பதற்கான விண்ணப்பங்களும் குவிந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடப் பயன்படுத்தப்படும் அட்டைகள் ஒஸ்திரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில் மத்திய வங்கியில் அந்நியச் செலாவணி இல்லாததால் சாரதி அனுமதிப் பத்திரங்களை அச்சிடும் நடவடிக்கைகள் பல மாதங்களாக முடங்கியுள்ளது.
இருப்பினும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் தற்காலிக அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
0 comments: