Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஏறாவூர் நகைத் தொழிலகம் உடைத்து திருட்டு


 ஏறாவூர் 4ஆம் குறிச்சி பிரதான வீதியை அண்டி அமைந்துள்ள நகைத் தொழிலகம் உடைத்துத் திருடப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


குறித்த நகைக் கடையில் 2.5 கிராம் நகை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உறவினர் ஒருவர் மரணித்ததனால் குறித்த நகைத் தொழிலகம் கடந்த எட்டு நாட்களாக பூட்டப்பட்டிருந்துடன் நேற்று புதன்கிழமை கடையைத் திறந்தபோது கடை பூட்டு உடைத்து திருடப்பட்டிருப்பது தெரியவந்ததாக கடை உரிமையாளர் மேலும் தெரிவித்தார்.

இந்த நகைத் தொழிலகத்திற்கு அருகிலுள்ள மற்றொரு நகைக் கடை கடந்த 2ஆம் திகதி பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த ஏ.ரி.எம்.வங்கி அட்டை உட்பட இன்னும் சில பொருட்கள் திருடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சோகோ பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

Post a Comment

0 Comments