சாதாரண தர பரீட்சை 2022 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி ஆகி உள்ள நிலையில் குறித்த பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு சில முக்கியமான அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது..
அவை பின்வருமாறு
சுமார் 5 லட்சத்து 14 ஆயிரத்து 496 மாணவர்கள் இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளனர்..
இதில் 4 லட்சத்து 7 ஆயிரத்து 129 மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் ஆகவும்.. ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 362 தனியார் பரீட்சாத்திகளும் பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளனர்..
பாடசாலை மாணவர்கள் தங்கள் தொடர்புடைய பாடசாலைகளில் சுட்டெண் பெற்றுக் கொள்வதுடன் அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும்.. தனியார் பரீட்சார்த்திகளுக்கு தபால் மூலம் அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.. அனுமதி அட்டைகள் உங்களுக்கு கிடைக்கவில்லை எனில் அதை இணையத்தளம் ஊடாக டவுன்லோட் செய்துகொள்ள முடியும்.. இதில் உள்ள லிங்கை பயன்படுத்தி உங்களால் அதனை டவுண்லோட் செய்து கொள்ள முடியும்.. – DOWNLOAD ADMISSION
பரீட்சை நிலையத்துக்கு மாணவர்கள் வரும்பொழுது அவர்களின் அனுமதி அட்டை மற்றும் தேசிய அடையாள அட்டை என்பன கொண்டு வரப்படுவது முக்கியமானதாகும்
சாதாரண தர பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புக்கள் மே மாதம் 20ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை செய்யப்படுகின்றன..
கோவிட் நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனினும் பரீட்சை மண்டபத்தில் பரீட்சை எழுதும் பொழுது முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் கிடையாது..தொற்று பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தனி அறைகள் பரீட்சை எழுதுவதற்கு வழங்கப்படும்..
குறிப்பாக எரிபொருள் நெருக்கடியின் போது மாணவர்களின் போக்கு வரத்துக்காக மேலதிக பேருந்துகள் மற்றும் ரயில்கள் என்பன இயக்கப்படும்..
மே மாதம் 23ஆம் திகதி பரீட்சை ஆரம்பித்து முடியும் வரை இரவு நேரங்களில் மின்சாரத்தடை ஏற்படுத்தப்பட மாட்டாது என மின்சார சபை அறிவித்துள்ளது..
பரீட்சைக்கு தேவையான எழுதும் உபகரணங்கள் தவிர்ந்து மேலதிகமாக வேறு ஏதும் பொருட்களைக் கொண்டு வருதல் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.. இலத்திரனியல் உபகரணங்கள் ஆன ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் கடிகாரம் என்பவற்றை பரீட்சை நிலையத்துக்குள் கொண்டுவரமுடியாது..
இந்த வருடம் முதல் தமிழ் இலக்கிய நயம், ஆங்கில இலக்கிய நயம் மற்றும் அரபு இலக்கிய நயம் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாளில் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன..புதிய கட்டமைப்பு உடைய வினாத்தாள் மாதிரி வடிவத்தை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது அதனை பெற்றுக்கொள்ள இந்த லிங்கில் டவுன்லோட் செய்து கொள்ளவும் – –DOWNLOAD PAPERS STRUCTURE
பரீட்சையின் போது கணித்தல் பொறி அதாவது கால்குலேட்டர் மற்றும் அழிமை ( correcting fluid) என்பவற்றை பயன்படுத்த முடியாது.. பரீட்சை மண்டபங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொள்ளுதல், மாணவர்களுக்கு இடையூறு விளைவித்தல், விடைகளை பகிர்ந்து கொள்ளுதல் என்பவை பரீட்சையின் சட்ட விதிகளுக்கு எதிரானவை என்பதை கருத்தில் கொள்ளுங்கள்
0 Comments