தற்போதைய நெருக்கடிக்கு நாடாளுமன்றம் தீர்வு காணும் வரை தாங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாளை (9) முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மே 17ஆம் திகதி பொதுமக்களுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களால் நாடாளுமன்றத்தை முற்றுகையிடவுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
மேலும் அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
0 Comments