எதிர்வரும் வாரம் முதல் நாட்டின் சகல பகுதிகளிலும் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமென வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் இலங்கை மின்சார சபை விளக்கமளித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் அன்ட்ரூ நவமுனி ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,
நாட்டின் சகல பகுதிகளிலும் 10 மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை.
இவ்வாறானதொரு விடயம் தொடர்பில் இதுவரையில் இலங்கை மின்சார சபையினால் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.
அத்துடன் தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் குறித்து இலங்கை மின்சார சபை இன்று கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 10 மணித்தியால மின்வெட்டு தொடர்பில் தமக்கு இதுவரை அறிவிக்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவும் குறிப்பிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: