கொழும்பு - காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று 27 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு உடனடியாகப் பதவி விலகி, நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த மக்கள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
இதனிடையே, பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவையைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் மைனா கோ கம போராட்டம் இன்று 11 ஆவது நாளாகத் தொடர்கின்றது.
இந்தப் போராட்டத்தில் ஒருவர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: