Advertisement

Responsive Advertisement

கோட்டாபய -மகிந்த அரசில் காவல்துறைக்கு ஏற்பட்ட நிலை - அம்பலப்படுத்திய காவல்துறை மா அதிபர்

 


அண்மைக்காலமாக காவல்துறை தீவிர அரசியல் மயப்படுத்தப்பட்டமையே காவல்துறை மீது பொதுமக்களின் அதிருப்திக்கு காரணம் என காவல்துறை மா அதிபர் சி.டி.விக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே விக்கிரமரட்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்தில் காவல்துறை எப்படி அரசியல்மயமாக்கப்பட்டது என்பதை அந்தக் கடிதத்தில் அவர் விரிவாக விளக்கியுள்ளார்.

01.01.2021 முதல் 03.11.12021 வரை அரசாங்கம் வழங்கிய 184 OIC பதவிகளில் இரண்டு OIC களுக்கு மட்டுமே உரிய தகுதியுடன் பதவி வழங்கப்பட்டுள்ளது என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 182 ஓ.ஐ.சி.க்கள் அவர்களின் பரிந்துரையின்றி அரசியல் அதிகாரத்தின் பேரில் நியமிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் காவல்துறை மா அதிபர் எழுத்து மூலம் அறிவித்திருந்தமை இந்தக் கடிதத்தில் தெரியவந்துள்ளது.

Post a Comment

0 Comments