Advertisement

Responsive Advertisement

மின்வெட்டுத் தொடர்பான செய்தி...

 


தற்போது அமுலாக்கப்படும் மின் தடை நேரத்தை குறைக்க முடியும் என மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


மழையுடனான காலநிலையால், நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்டியுள்ள நீர்த்தேக்கங்களில், நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவு உயர்வடைந்துள்ளமையே இதற்குக் காரணமாகும் என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நீர்மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம், தற்போது 50 சதவீதமளவில் உயர்வடைந்துள்ளதாக மின்சார சபையின் சிரேஷ்ட பொறியியலாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரண தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments