நாட்டில் ஏற்பட்டுள்ள வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பு காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மோதலில் ஈடுபட்ட அனைவரையும் அரசியல் கட்சி வேறுபாடின்றி கைது செய்யுமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் பாதுகாப்புப் படையினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
0 comments: