கொழும்பு - பத்தரமுல்ல பகுதியில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கணினி கட்டமைப்பில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக கடவுச்சீட்டு விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் செயற்பாடு இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை கையளிப்பதற்காக தூரப்பிரதேசங்களில் இருந்து வந்தவர்கள் குழப்பமடைந்து இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்தரமுல்லை பிரதான வீதியினை இன்று காலை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் பொரளை - கொட்டாவ, பொரளை - கடுவலை வீதிகளில் சுமார் ஒரு மணிநேரம் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேவை இடை நிறுத்தப்பட்டதால் திணைக்களத்தின் முன்பக்க கதவின் கண்ணாடியும் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: