அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரை தவிர, ஏனைய அரச ஊழியர்களை நாளைய தினம் வேலைக்கு வருகைத் தர வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று அறிவித்தார்.
எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்றமையினால், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இவ்வாறு அரச ஊழியர்கள் வருகைத் தராத பட்சத்தில், எரிபொருளை மீதப்படுத்த முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகின்றார்.
எதிர்வரும் ஜுன் மாதம் வரை நாட்டிற்கு தேவையான எரிபொருள் கொண்டு வரப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
அதேபோன்று, அத்தியாவசியமற்ற பயணங்களில் ஈடுபட வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகின்றார்
0 comments: