Home » » ஸ்தம்பித்தது இலங்கை!! திடீரென அமைச்சரவையை சந்திக்கும் கோட்டாபய

ஸ்தம்பித்தது இலங்கை!! திடீரென அமைச்சரவையை சந்திக்கும் கோட்டாபய

 


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெறும் என அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான நாலக கொடஹேவா (Nalaka Godahewa) அறிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்திற்கு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமை தாங்கவுள்ளார்.

பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள 24 மணிநேர ஹர்த்தால் காரணமாக இலங்கையின் பல துறைகள் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன.

ஹர்த்தாலில் முக்கிய வர்த்தகப் வலயங்கள் மற்றும் பல முக்கிய நகரங்களில் கடைகள் மூடப்பட்டதுடன், புகையிரதங்கள் மற்றும் பேருந்துகள் மற்றும் பொதுச் சேவைகள் உட்பட பல பொதுப் போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |