Home » » வாகனங்களில் கப்புட்டு காக்கா காக்கா பசில்.. பசில்.. என்ற ஒலியை எழுப்பினால் ஆபத்து

வாகனங்களில் கப்புட்டு காக்கா காக்கா பசில்.. பசில்.. என்ற ஒலியை எழுப்பினால் ஆபத்து

 


நாட்டில் தற்போது வாகன சாரதிகள் மத்தியில் பிரபலமாகியுள்ள கப்புட்டு காக் காக் காக் பசில் பசில் என்ற தாளத்தில் வாகனங்களில் எழுப்பும் ஒலி காரணமாக வாகனங்கள் தீப்பிடித்து எரிய கூடும் என இயந்திர பொறியியலாளர் முர்த்தி தேவசுரேந்திர தெரிவித்துள்ளார்.

நீண்ட நேரம் வாகனங்களின் ஒலியை எழுப்பும் போது ஒலி கருவியின் மின் கம்பிகள் ஊடாக அதிகமாக மின்னோட்டம் பாய்வதால், வாகனம் தீப்பிடிக்க கூடும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சாதாரணமாக சில நொடிகள் பயன்படுத்தும் வகையிலேயே வாகனங்களுக்கான ஒலிக் கருவிகள் தயாரிக்கப்படுகின்றன.

அதனை நீண்டநேரம் ஒலிக்க செய்வதன் காரணமாக அதிகளவான மின்னோட்டம் மின் கம்பிகள் ஊடாக பயணித்து தீப்பற்றக் கூடும் எனவும் முர்த்தி தேவசுரேந்திர கூறியுள்ளார்.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பமான பின்னர், போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் கப்புட்டு காக்கா காக்கா பசில் பசில் என்ற கோஷத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த கோஷம் தற்போது நாடு முழுவதும் வாகன சாரதிகள் மத்தியில் பிரபலமடைந்துள்ளது.   

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |