இலங்கையின் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பிரதமராக பதவி வகித்த மகிந்த ராஜபக்ச, பதவி விலகுவதாக தன்னுடைய பதவி விலகல் கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ள நிலையில், அமைச்சரவையும் கலைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாட்டின் அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் ஆளுகையின் கீழ் முன்னெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
0 comments: