Advertisement

Responsive Advertisement

பலத்த இராணுவ பாதுகாப்புடன் வெளியேறிய மகிந்த! அலரி மாளிகைக்குள் சிக்குண்டுள்ள பணியாளர்கள்


இன்று அதிகாலை பலத்த இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு தொடக்கம் இன்று அதிகாலை வரை அலரி மாளிகையை சுற்றியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையிலேயே  இன்று அதிகாலை பலத்த இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் நேற்றைய தினம் பிரதமர் அலுவலகத்திற்கு பணிக்காக சென்ற பலர் இன்னும் அங்கு சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அலரி மாளிகையை விட்டு வெளியேறத முடியாத நிலையில் நேற்று முதல் அங்குள்ளதாக அங்கு பணியாற்றும் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்துள்ள மகிந்த வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச் செல்லலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 

நைஜீரியாவில் இருந்து சிறப்பு விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தகவல்கள் வெளியாகி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Post a Comment

0 Comments