Advertisement

Responsive Advertisement

பல நாட்களுக்கு பின்னர் வெளியில் வந்த ஜனாதிபதி

 


யுத்த வெற்றி, போரில் உயிரிழந்த, அங்கவீனமடைந்த படையினரை நினைவு கூரும் வகையிலும் நடத்தப்படும் தேசிய நினைவு தின நிகழ்வு முப்படை தளபதியும் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ச தலைமையில், பத்தரமுல்லையில் உள்ள தேசிய படையினர் நினைவு தூபிக்கும் அருகில் இன்று நடைபெற்றது.

இதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, இராணுவ தளபதி சவேந்திர சில்வா, கடற்படை விமானப் படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜனாதிபதி, நினைவு தூபியில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளார்.

காலிமுகத் திடல் உட்பட நாடு முழுவதும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பமான பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளார்.

பல நாட்களுக்கு பின்னர் வெளியில் வந்த ஜனாதிபதிபல நாட்களுக்கு பின்னர் வெளியில் வந்த ஜனாதிபதிபல நாட்களுக்கு பின்னர் வெளியில் வந்த ஜனாதிபதி

Post a Comment

0 Comments