Home » » ஆசியாவில் 54 ஆண்டுகளுக்கு பின் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை

ஆசியாவில் 54 ஆண்டுகளுக்கு பின் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை

 


இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஆசியாவில் கடனை திரும்ப செலுத்தாத மூன்றாவது நாடாக இலங்கை மாற்றப்பட்டுள்ளதாக பொருளியல் விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் பிரேமச்சந்திர அத்துகோரள தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் 1962 ஆம் ஆண்டு மியன்மாரும்,1968 ஆம் ஆண்டு இந்தோனேசியாவும் கடனை திரும்ப செலுத்துவதை தவிர்த்தன. இதன் பின்னர் 54 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையை வெட்ககேடான இந்த இடத்தை நோக்கி தள்ளியுள்ளனர்.

பிரதிபலன்களை பெற முடியாத அபிவிருத்தித் திட்டங்களுக்காக அதிகமான வட்டியில் பெருந்தொகை கடனை பெற்றமையே தற்போது ஏற்படடுள்ள நெருக்கடிக்கு பிரதான காரணம்.

இதற்கு முன்னர் இவ்வாறு அதிகமான வட்டிக்கு கடனை பெற்ற அர்ஜன்டீனா, சிம்பாப்வே மற்றும் லெபனான் ஆகிய நாடுகள் வங்குரோத்து அடைந்து விட்டன எனவும் பேராசிரியர் பிரேமச்சந்திர அத்துகோரள கூறியுள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |