அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு - காலி முகத்திடலில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்போதுவரையிலும் தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்தின் நுழைவாயிலை மறித்து தற்போது போராட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், இதுவரை போராட்டக்காரர்கள் யாரும் தாக்கப்படவில்லை அல்லது கலைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் பதவி விலக வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments