Advertisement

Responsive Advertisement

திருக்கோவில் பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்கு காணி அளிப்புக்கள் வழங்கி வைப்பு

 


எம்.எம்.ஜெஸ்மின்)

அம்பாரை திருக்கோவில் பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக அரச காணிகளில் விவசாயம் மற்றும் குடியிருந்து வரும் 50 குடும்பங்களுக்கு அரசின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் இன்று காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டு இருந்தன.

இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்று இருந்தன.


திருக்கோவில் பிரதேசத்தில் அரச காணிகளில் தொடர்ச்சியாக மிக நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்ற மற்றும் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மக்களுக்கான காணி அளிப்புக்களை வழங்கும் நோக்குடன் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் அவர்களின் முயற்சியின் ஊடாக காணிப்பிரிவு உத்தியோகத்தர்களின் துரித நடவடிக்கைகள் காரணமாக இக்காணி அளிப்புக்கள் பிரதேசத்தில் அதிகமாக வழங்கப்பட்டு வருகின்றன.

அந்நதவகையில் இன்று திருக்கோவில் பிரதேசத்தில் 50 குடும்பங்களுக்கு காணி அளிப்பு பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ.டக்ளஸ் அவர்கள் கலந்து கொண்டு காணி அளிப்புக்களை வழங்கி வைத்திருந்ததுடன் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி அனோஜா துஷாந் நிருவாக உத்தியோகத்தர் ரீ.மோகனராஜா காணிப் பிரிவு உத்தியோகத்தர் திருமதி லோஜினி கோகுலன் காணிப் பரிவு உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு காணி அளிப்புக்களை வழங்கி வைத்திருந்தனர்.

Post a Comment

0 Comments