அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் வீட்டின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு காணமடைந்தவர்களில் இருவர் ஊடகவியலாளர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் அறுவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நால்வர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது
0 Comments