Advertisement

Responsive Advertisement

நாமல் சிறிலங்காவை விட்டு வெளியேறவில்லை- தற்போது வெளியாகியுள்ள ஆதாரம்

 




சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

எனினும் இன்றைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டுள்ளார்.

முன்னதாக, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை தொடர்ந்து, அரச தலைவர் பதவி விலக வேண்டும் என தெரிவித்து தொடர் போராட்டங்கள் மக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையிலேயே நாமல் ராஜபக்ச, கடந்த 3ம் திகதி தனது விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அதனையடுத்து அன்றிரவே டுபாய் சென்றுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக நாமல் ராஜபக்சவின் குடும்பத்தினர் (மனைவி, மகன் மற்றும் மாமியார்) ஏப்ரல் 2ம் திகதி வெளிநாட்டிற்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

தற்போது நாட்டிலிருந்து வெளியேறியுள்ள நாமல் ராஜபக்சவின் குடும்பம் டுபாயிலிருந்து மேற்கத்திய நாட்டிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியிருந்தது.

 எனினும் இன்றைய தினம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற அமர்வில் நாமல் ராஜபக்சஷ கலந்துகொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments