Advertisement

Responsive Advertisement

மொரட்டுவையில் பதற்றம்! மோசமடையும் நிலைமை: விசேட அதிரடிப்படையினர் களத்தில்


புதிய இணைப்பு

மொரட்டுவ பகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் தீவிர நிலையை  அடைந்துள்ளது. 

இதன் காரணமாக பதற்றத்தைத் தணிக்க விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.  

முதலாம் இணைப்பு

கொழும்பின் புறநகர் மொரட்டுவையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தும் பொதுமக்கள், மொரட்டுவை நகர முதல்வர் சமன் லால் பெர்ணான்டோவின் வீட்டுக்கு கல்லெறிந்ததை அடுத்தே அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீரிஹனையில் நேற்று ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்துக்கு செல்லும் பாதை முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதனையடுத்து அங்கு வன்முறைகளும் இடம்பெற்றன.

இந்தநிலையில் இன்று மொரட்டுவை, புத்தளம் போன்ற பல இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

Post a Comment

0 Comments