Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சமல் ராஜபக்ஷவின் வீடு முற்றுகை- நாடளாவிய ரீதியில் விஸ்தரிக்கும் மக்கள் போராட்டம்!

 


சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரது வீடுகளுக்கு முன்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக பல வீதிகளின் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சமல் ராஜபக்ஷவின் தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினர் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அதேவேளை ஜனக பண்டார தென்னகோனின் வீடு மற்றும் ரோஹித அபேகுணவர்தனவின் அலுவலகம் முன்பாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முயன்றுள்ளனர். இதனையடுத்து, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments