அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட அரசாங்கத்தில் இருந்து விலகிய கூட்டணிக் கட்சிகள் உள்ளிட்ட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாண இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்குமாறு கூட்டணிக் கட்சிகள் முன் வைத்த யோசனையை அரசாங்கம் நிராகரித்த காரணத்தினால், இந்த முடிவை எடுக்க தீர்மானித்துள்ளதாக அணியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தமது அணியின் நிலைமைப்பாட்டுக்கு செவிசாய்க்கவில்லை என்றால், அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கியுள்ள மக்களுக்கு ஆதரவை வழங்குவதை தவிர வேறு மாற்று வழியில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனடிப்படையில் இந்த கூட்டணிக் கட்சிகள் கூடி அறிக்கை ஒன்றை தயாரித்து வெளியிடப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகியுள்ள விமல் வீரவங்ச அணி, அனுர பிரியதர்ஷன யாப்ப அணி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அணி ஆகிய அணிகள் இணைந்து அறிக்கையை வெளியிட உள்ளன.
0 Comments