நாளை முதல் நாடு முழுவதும் திட்டமிடப்பட்ட மின்வெட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக மின்விநியோக தடையை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.
எவ்வாறாயினும், திட்டமிடப்பட்ட மின்வெட்டு நாளை முதல் மீண்டும் தொடங்கும் எனவும் 02 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்சார விநியோகம் தடைப்படும் எனவும் இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
காலை 09.00 மணி முதல் மாலை 06.00 மணி வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் அதேவேளை இரவில் மின்வெட்டு விதிக்கப்படாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments: