Advertisement

Responsive Advertisement

கொழும்பிற்குள் நுழையும் ஆயிரக்கணக்கானோர்- அரச தலைவர் மாளிகைக்கு முன் குவிக்கப்பட்டுள்ள படையினர்!

 


கொழும்பின் பல இடங்களிலும் பாதுகாப்புப் பணிகளுக்காக அதிகளவான படையினர் பேருந்துகளில் அழைத்து வரப்பட்டு, குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெறும் அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறு ஆர்ப்பாட்டங்களை அடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கோட்டையில் அமைந்துள்ள அரச தலைவர் மாளிகை பகுதிக்கு அழைத்து வரப்படும் படையினர், பின்னர் கொழும்பின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேவிபியின் எதிர்ப்பு பேரணி, இன்று மொரட்டுவையில் இருந்து கொழும்பிற்கு செல்லவுள்ளது. இதேவேளை காலிமுகத்திடலில் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் இன்று11வது நாளாக இடம்பெறுகிறது.

அதேநேரம் நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன

Post a Comment

0 Comments