அஸ்ஹர் இப்றாஹிம்
சாய்ந்தமருது பிரதேச எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருள் நிரப்புவதற்காக எரிபொருள் நிரப்பு நிலைத்திலிருந்து இரு புறமும் சுமார் இரண்டு கிலோ மீற்றர் தூரத்திற்கு வரலாறு காணாத நீண்ட வரிசை இன்று காணப்பட்டது.
அதிகாலையில் இருந்தே வாகனங்கள் தொடராக காணப்பட்டதுடன் சுட்டெரிக்கும் வெயிலில் இளைஞர்கள் வயோதிபர்கள் பெண்கள் என பலரும் அந்த நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதனை சீர் செய்வதில் சாய்ந்தமருது வீதிப்போக்குவரத்து பொலிஸார் ஈடுபட்டனர்.
0 Comments