ரம்புக்கனை பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ்மா அதிபர் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த பகுதிக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை,ரம்புக்கனையில் ஏற்பட்ட கலவரத்தின் போது போராட்டக் காரர்கள் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியைத் தொடர்ந்தே பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,ரம்புக்கனை பொலிஸ் பிரிவில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், ஊரடங்கை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
0 Comments