Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அவசரகால பிரகடனத்தை மீள பெற வேண்டும்: சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை

 


அரச தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தினை நீக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, இலங்கை சட்டத்தரணிகள் தலைவர் சாலிய பீரிஸ் மற்றும் அதன் செயலாளர் அறிக்கையொன்றை வெளியிட்டு இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

அவசரகால நிலைமையை பிரகடனப்படுத்துவதானது, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


Post a Comment

0 Comments