பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் வெளிநாட்டவராகவும், அலி சப்ரியை நிதியாகவும், தினேஷ் குணவர்தன கல்வி மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நெடுஞ்சாலைகள் அமைச்சர்களாகவும் நிரந்தர அமைச்சரவை அமைக்கப்படும் வரை பதவிப் பிரமாணம் செய்துகொண்டதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்.....
கோட்டாபய தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில், மக்கள் போராட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், நாடே போர்க்களமாக மாறியுள்ளது.
இந்நிலையில், கடுமையான அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்ததன் பின்னர், நான்கு புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
அதனடிப்படையில், பசில் ராஜபக்ஷவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக அலி சப்ரியும், வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
அதேவேளை கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும், நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: