Advertisement

Responsive Advertisement

நாடுமுழுவது இன்றும் போராட்டம்! பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல்

 


ஆர்ப்பாட்டம் காரணமாக நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியின் ஜா-எல பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து, இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

மேலும், ஹோமாகம பிரதேசத்தில் இளைஞர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தை எதிர்க்கும் வகையில் பதாகைகளை ஏந்தி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான இளைஞர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி - மாத்தறை வீதியூடான போக்குவரத்து, காலி பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் தடைப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன

Post a Comment

0 Comments