கேகாலை - றம்புக்கண பகுதியில் எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீயிட முயன்ற ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த தாம் உத்தரவிட்டதாக கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
றம்புக்கண பிரதேசத்தில் காவல்துறையினர் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கு தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை கேகாலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, சிதாவக்க காவல்துறை பிரிவுக்குட்பட்ட விசாரணைக் குழுவினர், சம்பவம் தொடர்பில் இதுவரை 51 பொதுமக்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
0 comments: