Advertisement

Responsive Advertisement

எரிபொருள் களஞ்சியப்படுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் ஆரம்பிக்கப்படும் நடவடிக்கை

 


அதிகளவில் எரிபொருட்களை களஞ்சியப்படுத்துவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றை களஞ்சியப்படுத்தி அவற்றை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாக உள்ளது.

சட்டத்தின் பிரகாரம் எரிபொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருக்க அனுமதி அவசியம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மட்டுமே எரிபொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்திருக்க அனுமதி வழங்கப்படுகின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் சட்டவிரோதமான முறையில் எரிபொருட்களை களஞ்சியப்படுத்தி விற்பனை செய்த இரண்டு குழுக்களை நேற்றைய தினம் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments