Advertisement

Responsive Advertisement

ரஷ்யாவிற்கு பலத்த அடி - பற்றி எரியும் எண்ணெய் கிடங்கு


 ரஷ்யாவின் பெர்ஹொரொட் நகரில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் விமானப்படை, ஹெலிகொப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

தங்கள் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கை உக்ரைன் இராணுவ ஹெலிகொப்டர்கள் தாக்கியதாக, ரஷ்யாவின் பெல்கோரோட் நகர ஆளுநர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நகரம் உக்ரைன் தலைநகர் கீவின் வடக்கில் அருகாமையில் அமைந்துள்ளது.

இரண்டு உக்ரைனிய இராணுவ ஹெலிகொப்டர்கள், ரொக்கெட்டுகளை ஏவி எண்ணெய் கிடங்கை தாக்கியதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 2 பேர் காயமடைந்ததாகவும், எனினும் அவர்கள் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை எனவும் இந்த தாக்குதலால் எண்ணெய் கிடங்கில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரைன் வெளியுறவு  அமைச்சர் டிமிட்ரோ குலேபா, இந்த தாக்குதல் குறித்து தன்னால் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாது என தெரிவித்துள்ளார்.

இராணுவ தகவல்கள் தன்னிடம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே ரஷ்ய எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் ஹெலிகொப்டர் மூலம் வான்வெளி தாக்குதல் நடத்திய நிலையில், உக்ரைனின் தாக்குதல் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக இருக்கும் என ரஷ்யா விமர்சனம் செய்துள்ளது

Post a Comment

0 Comments