( அஸ்ஹர் இப்றாஹிம்)
புத்தளம் மாவட்ட முதியோர் மெய்வல்லுனர் சங்கமும் இலங்கை முதியோர் மெய்வல்லுனர் சங்கமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்த அகில இலங்கை ரீதியிலான அஞ்சலோட்ட விழாவில் புத்தளம் மாவட்ட அணி சம்பியன்களாகவும் , கம்பஹா மாவட்ட அணி இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
வென்னப்புவ ஸ்ரீமத் அல்பட் எப் பீரிஸ் மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற மேற்படி அஞ்சலோட்டப் போட்டியில் 213 புள்ளிகளை புத்தளம் மாவட்ட அணியும் , 125 புள்ளிகளை கம்பஹா மாவட்ட அணியும் பெற்றிருந்தன.
35 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்ட ஆண் , பெண் இருபாலாருக்கும் இடையில் இடம்பெற்ற மேற்படி போட்டிகளில் ஆண்கள் பிரிவில் புத்தள மாவட்ட அணி 98 புள்ளிகளையும் , கம்பஹா மாவட்ட அணி 88 புள்ளிகளையும் , பெண்கள் பிரிவில் புத்தளம் மாவட்ட அணி 115 புள்ளிகளையும் கம்பஹா மாவட்ட அணி 37 புள்ளிகளையும் பெற்றுக் கொண்டன.
இந்நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் புத்தளம் மாவட்ட முதியோர் மெய்வல்லுனர் சங்கத்தின் தலைவர் பிளசிடஸ் பெரேரா தலைமையில் இடம்பெற்றது.
சீனாவில் இடம்பெற்ற ஆசிய முதியோர் மெய்வல்லுனர் போட்டியில் பதக்கம் வென்ற புத்தளம் மாவட்ட வீராங்கனையும் இவ்விழாவின் போது கௌவிக்கப்பட்டார்.
0 comments: